Saturday, March 13, 2010
POLITICS
உயர்ந்துவிட்ட காரணத்தாலும், அமெரிக்க அணு ஒப்பந்தம் போன்ற பிரச்சனைகளை மூடி மறைக்க மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி, பெண்கள் இட ஒதுக்கீட்டை கையில் எடுத்துள்ளது.
இது ஒருபோதும் நிறைவேரபோவதில்லை!
மாநிலங்கள் அவையில் யானை போன்று நுழைந்தது , மக்களவையில் ஆமை போன்று நின்றுகொண்டிருக்கிறது.
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் கொண்டுவர திராணி இல்லாத அரசு சட்டமன்றத்திலும் , நாடாளுமன்றத்திலும் இட ஒதுக்கீடு என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிறது. அப்படியே அது நிறைவேறினாலும் நியாயமகாது. ஏனென்றால் நுற்றிஆறு கோடி.
pulation Density of India: 1065,070,607 (July 2004 est.) பெண்களின் நிலைமை எப்படி உள்ளது என்று எனிப்பர்க்க வேண்டும். பல மாநிலங்களில் பெண்களின் கல்வி, அவர்களின் மீதான குடும்ப ஆதிக்கம், இன்னும் மத ரீதியாக பெண்களின் நிலை இன்னும் மோசம் உதாரணமாக இசுலாத்தில் பொதுவாகவே போதுமான கல்வி இல்லைஎனலாம் இங்கு பெண்களின் நிலை இன்னும் பின்தங்கி உள்ளது.
இது தவிர, சாதிய வகையில் மேல்தட்டு பெண்களின் நிலை மட்டுமே எல்லா நிலையிலும் ஓரளவு ஓகே. அனால் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட பெண்களின் நிலை போதுமான வளர்ச்சி பெறவில்லை.
இந்த நிலையில் மத்தியில் ஆளும் அரசு இதை கொண்டுவருவது நியாயமா?
மாநிலங்கள் அவையில் ஏன் இதுவரையில் இட ஒதுக்கீடு கொண்டுவரவில்லை. ?
இவற்றுக்கு எல்லாம் மேலாக, முதன்மையாக, அவசிய தேவையான
கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஏன் கொண்டுவரவில்லை ?
ராஜீவ் கனவு நிறைவேறும் என்கிறார்கள் . அனால் அவர் இறந்த பிறகு குஜ்ரால் ஆட்சியில்
(பல ஆண்டுகளுக்கு பின் ) கணக்கில் எடுத்துக்கொள்ளபட்டது . இதற்க்கு காங்கிரஸ் கட்சி சொந்தம் கொண்டாடுவது எந்தவகையில் நியாயம்?
இது நிறைவேறினால் பாராளுமன்றத்தில் தற்கொலை செய்துகொள்வேன் என்று கூறிய சரத் யாதவ் போன்றோர்கள் நிலைமையை நன்கு உணர்ந்துள்ளனர் .
மார்ச் 2010௨0௧0
COMMUNAL
டாக்டர் சாமி. சண்முகம் கூறுகிறார்:-தமிழகத்தில் சீர்திருத்தவாதி என்று கூறிக்கொண்ட, வாழ்ந்து வந்த ஈ.வே.ரா அவர்கள், தீண்டாமையை ஒழிப்பேன் என்று கூறிக்கொண்டு பிராமணர்களைத் திட்டியே தன் பொதுவாழ்வை சிறப்பாகக் கழித்தவர். தீண்டாமை எங்கு தலைவிரித்தாடியதோ அங்கு தன் பிரச்சாரத்தைச் செய்யாமல் மிரட்டினால் அஞ்சி ஓடும் பிராமணர்களைத் தாக்கியே வாழ்ந்தார். இன்று கேரளாவில் உள்ள வைக்கத்தில் அரிஜனங்களை ஆலயத்தில் நுழையவும், வழிபடவும் செய்தவர் ஏன் தீண்டாமை தலைவிரித்தாடிய, இன்னும் விரித்தாடும் பரமக்குடி, முதுகுளத்தூர், மானாமதுரை பகுதிகளில் ஆலய பிரவேசம் செய்யவில்லை? வைக்கத்தில் நம்பூதிரி பிராமணர்களை எதிர்த்து நுழைந்தார். இங்கே முக்குலத்தோரை எதிர்க்கவேண்டும். இங்கே முயன்று இருந்தால் ரத்த ஆறு ஓடும். அங்கே நம்பூதிரிகள் அஞ்சி ஓடுவர் இதுதான் உண்மை.ஈ.வே.ரா அவர்கள் 1967வரை தீண்டாமை ஓழிப்பதாக தீவிரமாக பேசிவந்தார். திருவரங்கத்தில் பிராமணர்களின் பூணூல் அறுக்கப்பட்டது. பூணூல் போடுவது பிராமணர்களுக்கு மட்டும் உரிய பழக்கம் இல்லை. செட்டியார், கம்மா, பலிஜா, வள்ளுவர், தச்சர், கொல்லர், ரெட்டியார் ஆகிய பிரிவினரிடையே இன்றும் சிறப்பாக விழாவைத்து நூல் அணிவிக்கப்பட்டுவரும் ஒரு சம்பிரதாயமாகும். மற்றவர்களைத் தொடாமல் பயந்தோடும் பிராணமர்களை மட்டும் அச்சுறுத்தி வந்தார். 1967-ல் அவருடைய கொள்கையில், ஊறிப்போய், பிரிந்து ஆட்சி அமைத்த தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் தீண்டாமை ஓழிப்பை தீவிரப்படுத்தியிருந்தால் அன்றைய தி.மு.க. அரசு ஓரளவுக்காவது தீண்டாமையை ஓழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும். ஈ.வே.ரா. இதை ஏன் செய்யவில்லை என்பது ஒரு மர்மமான செயலாகும்.ஈ.வே.ரா.வின் நடவடிக்கைகள் எந்த வகையிலும் தாழ்த்தப்பட்டவர்களுக்குப் பயன்படவில்லை என்பது உண்மை.(நூல்:- தலித்துகள்)
Subscribe to:
Comments (Atom)